தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 93,537 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 84 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், தூத்துக்குடியை சேர்ந்த 18 வயது இளம்பெண் இன்று கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஐ கடந்துள்ளது. மேலும், தமிழகத்தில் தொடர்ந்து 56-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,989 ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 222 பெரும், திருவள்ளூரில் 199 பெரும், மதுரையில் 202 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…