பிப்ரவரில் 86.15 லட்சம் பேர் பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!
Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86.15 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக பிப்ரவரி 9-ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்ததாகவும் , கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1,51,624 பேர் அதிகம் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.
READ MORE- போதைப்பொருள் கடத்தல் வழக்கு – ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
(01.01.2024 முதல் 31.01.2024 வரை) மொத்தம் 84,63,384 பயணிகளில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். (01.02.2024 முதல் 29.02.2024) வரை மொத்தம் 86,15,008 பயணிகளில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக (09.02.2024) அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28.640 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
READ MORE- பொதுத்தேர்வுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
86.15 lakh passengers recorded to have travelled in February, 2024
CMRL has always endeavored to provide the people of Chennai with a safe, efficient, and reliable travel partner. A total of 86,15,008 passengers have travelled in the Metro Trains from 01.02.2024 to 29.02.2024.… pic.twitter.com/yyKgBIoOBa
— Chennai Metro Rail (@cmrlofficial) March 1, 2024