கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகத்தில் தொடங்கியது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதனை அடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து 1.01 கோடி அனுப்பப்பட்டுள்ளது. அதில் 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசின் கையிருப்பில் 12,000 தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்ட தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே கடந்த வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டது. மேலும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தடுப்பூசிகளை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால், எதிர்பார்த்த நேரத்திற்கு தடுப்பூசி கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்திற்கு 85 ஆயிரம் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப உள்ளதாகவும், போதிய அளவு கையிருப்பு இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…