விமானம் மூலம் தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தது..!

Default Image
  • தமிழகத்துக்கான 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.
  •  தடுப்பூசி போடும் பணி நாளை முதல் தொடங்கலாம் என தகவல்.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகத்தில் தொடங்கியது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதனை அடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து 1.01 கோடி  அனுப்பப்பட்டுள்ளது. அதில் 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசின் கையிருப்பில் 12,000 தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்ட தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டது. மேலும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தடுப்பூசிகளை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால், எதிர்பார்த்த நேரத்திற்கு  தடுப்பூசி கிடைக்கவில்லை.

இந்நிலையில், தமிழகத்திற்கு 85 ஆயிரம் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப உள்ளதாகவும், போதிய அளவு கையிருப்பு இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்