திமுக பேரணியில் கொடி பிடித்த 85 வயது முதியவர்.!

Default Image
  • குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது.
  • இந்த பேரணியில் ஓசூரை சார்ந்த நாராயணப்பா என்ற 85 வயது முதியவர் கலந்து கொண்டு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தார்.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் பேரணி நடைபெற்றது . இந்த பேரணி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்தது. இதையடுத்து பேரணி நடைபெறும் இடத்திற்கு மு.க ஸ்டாலின் காலை10.20 மணிக்கு  வந்தார்.

பின்னர் மு.க ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணியாக சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது.

பேரணியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும்  குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.இந்தப் பேரணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பா என்பவர் கலந்து கொண்டார்.நாராயணப்பா பேரணியில் கலந்து கொண்டதால் பலரை நெகிழ்ச்சி அடையவைத்தது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டது குறித்து பேசிய நாராயணப்பா”ஓசூரில் இருந்துரயில் மூலம் இன்று காலை சென்னை வந்தேன். பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருக்கிறேன். எனக்கு 85 வயதாகிறது. கருணாநிதிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.

கருணாநிதி இல்லையென்றாலும் எங்களுக்கு ஸ்டாலின் உள்ளார். கருணாநிதி ,ஸ்டாலின் இருவரும் ஒன்றுதான்.  திமுகவின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்” எனத் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்