மேக்கிங் இந்தியா திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர் – ஜே.பி.நட்டா

Default Image

பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது என ஜே.பி.நட்டா குற்றசாட்டு. 

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த நிலையில், அவர் மதுரையில் நடந்து வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் வளர்ச்சிக்கும்,கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி உள்ளது பயண நேரத்தை குறைப்பதற்கு 4, 6 வழிச்சாலைகளை சாகர்மால திட்டம் என கொண்டு வந்தது பாஜக.

மேக்கிங் இந்தியா திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர். பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது,சரியான அரசு ஆட்சி செய்கிறது தொழிற் துறையில் முதலீடு செய்வதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டிலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்