தமிழக அரசின் 85% மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

Published by
Castro Murugan
சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியிட்டது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்துசெய்தது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை இருக்கக்கூடாது. உள் ஒதுக்கீடு இன்றி, ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையிலேயே சேர்க்கை நடத்த வேண்டும். புதிய தர வரிசைப் பட்டியலைத் தயார்செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது, உயர் நீதிமன்றம்.
இதனிடையே, ‘உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published by
Castro Murugan
Tags: education

Recent Posts

கல்வி தரத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது! அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…

13 minutes ago

கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?

சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…

1 hour ago

எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள்  இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…

2 hours ago

புதுச்சேரி : ஆல் பாஸ் முறை ரத்து! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!

புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…

2 hours ago

2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு? அன்புமணி ராமதாஸ் அதிரடி!

காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…

3 hours ago

“உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது.…

3 hours ago