தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,575 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 82 பேரில், தனியார் மருத்துவமனையில் 28 பேரும், அரசு மருத்துவமனையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அறியலூரை சேர்ந்த 22 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 60-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.59 சதவீதமாக உள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,076 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,650 ஆக அதிகரித்துள்ளது.
இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 242 பெரும், மதுரையில் 231 பேரும், திருவள்ளூரில் 226 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,665 ஆக அதிகரித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…