குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கடந்த 23ம் தேதி அன்று குடியுரிமை புதிய சட்ட திருத்த மசோதா எதிர்த்து மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்த பேரணி 8000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், தமிழக அரசு சார்பில் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய மாநில உளவுத்துறை அறிக்கையை தெளிவுபடுத்த வேண்டும். 8000 பேர் மீது வழக்கு பதிவு போட்டாலும் நாங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம் என சவால் விடுத்தார் மேலும் ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் போராட்டம் எதுவாக இருந்தாலும் 50 பேர் பங்கேற்றாலும் 200 பேர் கூட்டி சொல்வதுதான் வழக்கம்.ஆனால் எதிர்க்கட்சிகள் அதிக பேர் பங்கேற்றாலும் குறைவாகவே தான் சொல்வார்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…