வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேட்டில் 800 கடைகள் திறப்பு!

Default Image

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேட்டில் A முதல் G வரையுள்ள 800 கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, ஆனால் முழுவதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் வணிக வளாகங்கள் போக்குவரத்துகள் அனைத்துமே முடக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், சில கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

கோயம்பேடு வணிக வளாகம் மொத்தமாக மூடப்பட்டிருந்தது, தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, மொத்த விற்பனை கடைகள் மட்டும் திறப்பதற்கு அனுமதி கொடுத்தது. சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் நடத்தி வரக்கூடிய சிறிய கடைகள் இயங்குவதற்கு அனுமதி வேண்டும் என தொடர்ந்து வியாபாரிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்பொழுது மே முதல் ஜூலை வரை உள்ள 800 கடைகளை கோயம்பேடு சந்தையில் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் கட்டுப்பாடுகளையும் சமூக இடைவெளியையும் கடைப்பிடித்தும் கடைகளை பயன்படுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வியாபாரிகளும், பொதுமக்கள் தயவுசெய்து வணிக வளாகத்துக்கு வரவேண்டாம் எனவும், உங்களை சுற்றியுள்ள சில்லறை கடைகள் வைத்திருக்கக்கூடிய வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வதை ஊக்கப்படுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்