வங்கக்கடலில் 800கி.மீ. தொலைவில் புயல் சின்னம் …!12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்…!வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் 800கி.மீ. தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை அருகே வங்கக்கடலில் 800கி.மீ. தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஆந்திராவில் ஓங்கோல்- காக்கிநாடா இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை காசிமேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டுமையம் திறக்கப்பட்டுள்ளது.