சென்னையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
இந்தநிலையில் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க, சென்னை நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் வரை மெரினா கடற்கரை காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ரவுடிகளுக்கு அனுமதி இல்லையெனவும், கஞ்சா கடத்தலையும், விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சாவை செய்துள்ளதாகவும், கஞ்சா, குட்கா, ரவுடிசத்தை குறைக்க கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…