விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து 800 ஆவணங்கள் தாக்கல்!

Vijaya baskar

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து 800 ஆவணங்கள் தாக்கல் என தகவல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து 800 சொத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 800 சொத்து ஆவணங்களும், 10,000 பக்கங்களை கொண்டவை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விஜய பாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் மீது நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிமுகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest