24 மணி நேரத்தில் குவிந்த 80 ஆயிரம் விண்ணப்பங்கள்.!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர சேர்க்கைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை கடந்த 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 109 கல்லூரிகளுக்கும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 571 தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்லைனில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31 வரை உள்ளது.வருகின்ற நாட்களிலும் கலை அறிவியல் படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கு 5 நாட்களில் 73,000 மாணவர்களே விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025