8 வயது சிறுவனுக்கு பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தையின் காதலி…!
குடியாத்தம் பகுதியில் 8 வயது சிறுவனுக்கு தந்தையின் காதலி கை மற்றும் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் வசித்து வரக்கூடிய சேட்டு என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி. ஈஸ்வரிக்கும், சேட்டுவுக்கும் 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பதாக ஈஸ்வரி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சேட்டு தனது மனைவியின் இறப்புக்குப் பின்பு, அண்டை வீட்டுப் பெண்ணான வேணி என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களுடன் இருந்த 8 வயது சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் தனது அத்தை வீட்டுக்கு சென்ற சிறுவன், தன்னுடைய முதுகு, கை, கால் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் தீ காயங்கள் இருப்பதை காண்பித்துள்ளார். மேலும் தந்தையுடன் தொடர்பில் இருக்கக்கூடிய அண்டை வீட்டுப் பெண்மணி வேணி தான் இதை செய்தார் என்பதையும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து சிறுவனின் அத்தை காவல்நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட சிறுவனிடம் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இறந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்த சிறுவனுக்கு தந்தையின் காதலி செய்த இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.