பெற்றோர் கண் முன்னே மின்சாரத்திற்கு பலியான 8 வயது சிறுவன்!மறியலில் ஈடுபட்ட பெற்றோர்!
திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை தெருவில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார்.அங்குள்ள ஒரு பள்ளியில் இவரது 8 வயது மகன் ரகுநாதன் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களாக திண்டிவனம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தாலுகா அருகில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள விளக்கின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மூடி வைக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 9-ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன் ரகுநாதன் கட்டிட பணி நடைபெற்று கொண்டிருக்கும் இடத்தில் உள்ள மணற்குவியலில் விளையாடி கொண்டிருந்துந்துள்ளார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அதிகாரிகளின் மெத்தன போக்காலும் அலச்சியத்தாலும் பெத்தமகனை பலிகொடுத்துவிட்டோம் என்று வேதனையில் பெரியார் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்துசென்றுள்ளனர்.