8 வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 8இல் மீண்டும் விசாரணை!
மத்திய அரசானது, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது. இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு, கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கபட்டது. மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது.
8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. அந்த வழக்கினை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கையில், மத்திய அரசானது 8 வழி சாலை குறித்த திட்ட வரையறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.