அட்சய திருதியை…தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இத்தனை டன் தங்கம் விற்பனையா?..!
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இந்த வேளையில்,அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது.இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை.
இந்த வேளையில்,அட்சயதிருதியை முன்னிட்டு நேற்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.இதனால் நேற்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 18 டன்னுக்கும் அதிகமான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததைவிட கூடுதலாக விற்கப்பட்டதாகவும்,இதனால் தங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக சென்னை வைரம் மற்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 30% கூடுதல் விற்பனை”,என்று தெரிவித்துள்ளார்.