முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் அடுத்தடுத்து தாயகம் திரும்பும் தமிழர்கள்.!
மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களில் ஏற்கனவே 18 தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். இன்று இரண்டாம் கட்டமாக 8 பேர் வந்துள்ளனர். நாளை 10 பேர் வரவுள்ளனர்.
வெளிநாடு வேலைக்கு சென்ற தமிழர்கள், தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு கம்பியூட்டர் வேலை என்று கூறிவிட்டு, பின்னர் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.
இதனை தமிழக அரசுக்கு அவர்கள் தெரியப்படுத்தி தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் பேரில் மத்திய அரசின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
ஏற்கனவே 18 தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். இன்று இரண்டாம் கட்டமாக 8 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர். அவர்களை சென்னை விமானநிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். மேலும் அவர் கூறுகையில் நாளை மேலும் 10 தமிழர்கள் தாயகம் வரவுள்ளனர் என குறிப்பிட்டார்.