அதிமுகவில் இருந்து மேலும் 8 பேர் நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 7 பேரை நீக்கம் செய்து இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மேலும் 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், சேலம் புறநகர் மாவட்டம், கழகத்தை சேர்ந்த அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால் 8 பேர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/ke62f4nTNL
— AIADMK (@AIADMKOfficial) March 4, 2022