தேசிய அளவிலான களரிப் போட்டிகளில் 8 பதக்கங்கள் – தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

Default Image

தேசிய அளவிலான களரிப் போட்டிகளில் 8 பதக்கங்கள் பெற்று,ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்திய பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கிய கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, 2020-21-ஆம் ஆண்டிற்கான களரிப் பயட்டு போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 600 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.அதன்படி,

மெய்பயட்டு பிரிவு:

  •  ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர் சீனிவாசன் – தங்கப் பதக்கம்.
  • பத்மேஷ் ராஜ் -வெள்ளிப் பதக்கமும்,
  • அரவமுதன் மற்றும் அக்ஷயா, வினோதினி – வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

உரிமி பிரிவு:

  •  மாணவர் பிரசன்னா – வெள்ளி பதக்கமும்,

கெட்டுகரி பிரிவு:

  • சீனிவாசன் மற்றும் லோகேஷ் – வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

சுவாடு பிரிவு:

  • இன்ப தமிழன் – வெண்கலம் பதக்கமும் வென்றார்.

இவ்வாறு,ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்