சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிட்டது மத்திய அரசு.இந்த திட்டத்தில் விவசாய நிலங்களை அரசு, கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.பின்னர் இந்ததிட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும் நிலம் கையகப்படுத்த தடையும் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரணையின் போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
ஆனால் இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தரப்பில் 3 மாதங்களுக்கும் மேலாக ஆவணங்கள் தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…