விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
புரவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், நேற்று காலை நாகை மாவட்டத்திற்கு சென்று வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு பின் மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டார். அதனைதொடர்ந்து நாகூர் தர்காவிலும் வழிபட்டார்.
இதனைத்தொடர்ந்து, அங்கு புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் எட்டு வழி சாலை தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம். எட்டு வழி சாலை மத்திய அரசின் திட்டம். நிலம் கையகப்படுத்தும் மட்டுமே மாநில அரசு. எட்டு வழிசாலை என்பது நீண்ட கால திட்டம். இப்போது தொடங்கினால் கூட முடிய ஆறு ஆண்டுகள் ஆகும் என்றும், தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம் என்றும், வெளிநாடுகளில் அதிகமாக 8 வழிசாலைகள் தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…