“கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்” – நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு..!

Default Image

கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 5 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.அப்போது பேசிய அமைச்சர்,1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும் மற்றும் ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த நிலையில்,

“கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 5 ஆண்டுகளில்  8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.அதன்படி,2021-22-ல் ரூ.8,017 கோடி செலவில் சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”,என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்