சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து அறிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நாட்டில் முதல் முறையாக ஊரகபகுதிகளில் ஏழை குடும்பங்கள் வசிக்கும் குடிசைக்கு பதிலாக நிரந்தர வீடுகள் காட்டித் தரப்படும் திட்டம் கடந்த 1975-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் இலக்கை அடைந்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவரும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளில் அமைத்துத் தரும் நோக்கத்துடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராம பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கு அடைந்திடும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகபகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு!
முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என கூறினார்
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…