8 மணிநேர வேலையை மீண்டும் உறுதி செய்த முதல்வருக்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் சமீபத்தில் 12 மணிநேர வேலை தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா, கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது தற்காலிகமாக நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மே-1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப்பெறப்பட்டது என அறிவித்தார்.
மே தின பூங்காவில் உள்ள உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவப்பு நிற உடையணிந்து வந்து தனது மரியாதையை செலுத்தினார். அதன்பின் சட்ட மசோதா பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் பெரும் முதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க 12 மணிநேர வேலை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.
தற்போது இந்த மசோதா திரும்ப பெறப்பட்டது என்றும், மசோதா திரும்பப் பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மீண்டும் 8 மணி நேர வேலையை உறுதி செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…