8 மணிநேர வேலை… உறுதி செய்த முதல்வருக்கு நன்றி; திருமாவளவன்.!

Thol Thiruma MKstalin

8 மணிநேர வேலையை மீண்டும் உறுதி செய்த முதல்வருக்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் சமீபத்தில் 12 மணிநேர வேலை தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதா, கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது தற்காலிகமாக நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மே-1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப்பெறப்பட்டது என அறிவித்தார்.

மே தின பூங்காவில் உள்ள உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவப்பு நிற உடையணிந்து வந்து தனது மரியாதையை செலுத்தினார். அதன்பின் சட்ட மசோதா பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் பெரும் முதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க 12 மணிநேர வேலை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

தற்போது இந்த மசோதா திரும்ப பெறப்பட்டது என்றும்,  மசோதா திரும்பப் பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மீண்டும் 8 மணி நேர வேலையை உறுதி செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்