அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை மேலெடுக்க கிராம மக்கள் உதவியோடு முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், இரவு நேரம் வந்ததால் இம்முடிவை நிறுத்தி வைத்தனர். காலை வருவாய்த்துறை தலைமையில் ஜேசிபி மூலமாக மீண்டும் கற்சிலையை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 8 அடி உயரமுள்ள சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இதை சுத்தம் செய்து பார்த்த பிறகு தான் இது பெருமாள் சிலை என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் அங்கு இந்த சிலைக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டுள்ளனர். இதனை அரியலூர் கோட்டாச்சியர் ஏழுமலை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இது திருச்சி அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாக இந்த கற்சிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…