தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075-ஆக உள்ளது.
இதில், 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவிற்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.