தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமுள்ள 8 மாவட்டங்கள்.! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.!

Published by
Ragi

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக 8 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் கொரோனாவின் தாக்கம் தற்போது கட்டுப்படுத்து பட்டாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. ஆனால் கடந்த ஞாயிறு அன்று  இறப்பு எண்ணிக்கை குறைந்து 12 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் ஒற்றை இலக்கு மரணங்களும், கோவை மற்றும் விருதுநகரில் தலா 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மற்றும் விருதுநகரில் இறப்பு எண்ணிக்கை அதிகமானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது முறையாக 119 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மரண எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாக மதுரை, விருதுநகர் மற்றும் கோவை திகழ்கிறது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாக சென்னை மற்றும் செங்கல்பட்டுக்கு அடுத்த இடத்தில் மதுரை உள்ளது. ஏனெனில் கடந்த 9 நாட்களில் மட்டும் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 4 மாநிலங்களில் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தேசிய மற்றும் மற்ற மாநிலங்களின் இறப்பு விகிதத்தின் சராசரியை விட 16 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாகவே உள்ளது. எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கும். இந்த மாவட்டங்களில் நாள்தோறும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ளதாலும், குறைவான பரிசோதனையாலும் அதிகம் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்! திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்! 

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

39 minutes ago
பெரிய திரையில் சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் பார்க்க ரெடியா? மெரினா, பெசன்ட் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்!பெரிய திரையில் சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் பார்க்க ரெடியா? மெரினா, பெசன்ட் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்!

பெரிய திரையில் சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் பார்க்க ரெடியா? மெரினா, பெசன்ட் நகரில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்!

சென்னை : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவு கட்டத்தை…

2 hours ago
என்றும் ‘ராஜா’ ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!என்றும் ‘ராஜா’ ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!

என்றும் ‘ராஜா’ ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!

லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…

2 hours ago
Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள்  கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…

3 hours ago
பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

16 hours ago
IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

18 hours ago