தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமுள்ள 8 மாவட்டங்கள்.! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.!

Default Image

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக 8 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் கொரோனாவின் தாக்கம் தற்போது கட்டுப்படுத்து பட்டாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. ஆனால் கடந்த ஞாயிறு அன்று  இறப்பு எண்ணிக்கை குறைந்து 12 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் ஒற்றை இலக்கு மரணங்களும், கோவை மற்றும் விருதுநகரில் தலா 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மற்றும் விருதுநகரில் இறப்பு எண்ணிக்கை அதிகமானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது முறையாக 119 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட மரண எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாக மதுரை, விருதுநகர் மற்றும் கோவை திகழ்கிறது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாக சென்னை மற்றும் செங்கல்பட்டுக்கு அடுத்த இடத்தில் மதுரை உள்ளது. ஏனெனில் கடந்த 9 நாட்களில் மட்டும் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 4 மாநிலங்களில் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தேசிய மற்றும் மற்ற மாநிலங்களின் இறப்பு விகிதத்தின் சராசரியை விட 16 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமுள்ளதாக எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாகவே உள்ளது. எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கும். இந்த மாவட்டங்களில் நாள்தோறும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ளதாலும், குறைவான பரிசோதனையாலும் அதிகம் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்