விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்து வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!
இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த வெடி விபத்தை அடுத்து வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின எனவும் தெரிவிக்கப்படுகிறது. அறையில் வெடிமருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…