மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸிக்கு மிக முக்கியநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
இதனால் இதன் தட்டுப்பாடு மிக அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டத்தை சார்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுரையின் சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்திலேயே மருந்து திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 8 பெட்டி ரெம்டெசிவிர் மருந்து மதுரையில் திருடப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…