8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் அளித்தார்.!
மறைந்த நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன.
தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திறகாகவும், அயராது உழைத்து நூல்கள் இயற்றிய தமிழறிஞர்கள் நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன.
இதில், நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது, கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பபை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும், இதற்கான உரிமை தொகையாக 1கோடி ரூபாய் நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.