இளம்பெண்ணுக்கு வன்கொடுமை: பள்ளிச் சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது!

Published by
murugan

விருதுநகரில் 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பள்ளி சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஹரன் அந்த இளம்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோ பதிவு செய்துள்ளார்.  அந்த வீடியோவை ஹரிஹரன் தன் நண்பர்கள் 3 பேருக்கு காட்டி உள்ளார்.

ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை  செய்துள்ளனர்.  மேலும், அந்த வீடியோ அதேபகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட  4 பள்ளி மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர், பள்ளி மாணவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரிஹரன் உட்பட 8 பேர் மீது அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Recent Posts

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

32 minutes ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

34 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

1 hour ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

2 hours ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

2 hours ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

3 hours ago