8 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் – டி.ஜி.பி. உத்தரவு…!!
8 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், பொள்ளாச்சி டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மதுரை குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கும், விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஜெயராம் பொள்ளாச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவிற்கும், கோபி செட்டிபாளையம் டி.எஸ்.பி செல்வம், காங்கேயத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். காங்கேயம் டி.எஸ்.பி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கோபிச்செட்டிபாளையத்திற்கும், தென்காசி டி.எஸ்.பி மணிகண்டன், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், வால்பாறை டி.எஸ்.பி சுப்பிரமணியன், பெரம்பலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி டி.எஸ்.பி முத்தழகு, ஐந்தாவது பட்டாலியன் துணை கமாண்டன்ட்டாக ஆவடிக்கு மாற்றப்பட்டுள்ளார்