திருச்சியில் 7ம் தேதி மாநாடு., அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை – முக ஸ்டாலின் அறிவிப்பு
வரும் 7-ஆம் தேதி திருச்சியில் ஒரு மாநாடு போல் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். நேற்று முதல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
வரும் 7-ஆம் தேதி திருச்சியில் ஒரு மாநாடு போல் ஒரு பிரமாண்டமாக கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை திமுக முதன்மை செயலாளர் நேரு அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் லட்சியம் பிரகடனத்தை, தமிழகத்திற்கான தொலைநோக்கு பார்வையை வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எனது தொலைநோக்கு பார்வையை அந்த நிகழ்ச்சியில் வெளியிட இருக்கிறேன் என்றும் அடுத்த 10 ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் முதலிடத்துக்கு வரும் சூழல் அந்த திட்டத்தை வகுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். இதனை செயல்படுத்தி காட்டவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது எனவும் உறுதி எடுத்துள்ளார்.
திட்டத்திற்கான முழு விவரங்கள் விரைவில் ஊடங்களுக்கு வெளியிடப்படும் என்றும் அடுத்த 20 நாட்களில் எங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இன்னும் 2 மாதத்தில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது என பிறந்தநாள் தினத்தன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.