78வது சுதந்திர தினம் : தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்றவர்களின் லிஸ்ட் இதோ…
சென்னை :
இன்று 78வது சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
இன்று 78வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அவ்வாறு இன்று முதலமைச்சரிடம் இருந்து விருது வாங்கியவர்களின் பட்டியலை கீழே காண்போம்.
- “தகைசால் தமிழர் விருது” காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது” இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கல திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான “கல்பனா சாவ்லா விருது” வயநாடு நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நல்லாளுமை விருது பட்டியல் :
- த.வனிதா, முதல்வரின் முகவரித்துறையின், தலைமை தொழில்நுட்ப அலுவலர்.
வீ.ஜெயசீலன், விருதுநகர் ஆட்சியர். - க.இளம்பகவத், பொது நூலகங்கள் துறை இயக்குநர்.
- ந.கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர்.
- ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர்.
- ஜெ.இன்னசன்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர்.
சிறந்த மாநகராட்சி : கோவை.
சிறந்த நகராட்சி : திருவாரூர் நகராட்சி.
சிறந்த பேரூராட்சி : கோவை, சூலூர் பேரூராட்சி.
சிறந்த மண்டலம் : சென்னை மாநகராட்சியில் உள்ள 14-வது மண்டலம்
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் (ஆண்கள்) :
- நெ.கதிரவன், ஈரோடு மாவட்டம்.
- ஜோஷன் ரெகோபெர்ட்க், கன்னியாகுமரி மாவட்டம்.
- சி.ஜெயராஜ், கடலூர் மாவட்டம்.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் (பெண்கள்) :
- செ.நிகிதா,கடலூர் மாவட்டம்,
- கவின் பாரதி, புதுக்கோட்டை மாவட்டம்.
- கா.ஆயிஷா பர்வீன், ராமநாதபுரம் மாவட்டம்.
தலைமைச்செயலரிடம் பாராட்டு சான்றிதழ்கள் :
- இரா.சுதன், தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர்.
- ப.மதுசூதன் ரெட்டி நத்தம் அரசு ஊழியர்.
- டி.ஜெகந்நாதன், வணிகவரி ஆணையர்.