ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவு…! – மாநில தேர்தல் ஆணையம்

Published by
லீனா

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புளுக்கு சாதாரணத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 09.10.2021 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் மேற்படி மாவட்டங்களில் கீழ்க்கண்டவாறு வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • காஞ்சிபுரம் – 72.33 %
  • செங்கல்பட்டு – 75.51 %
  • வேலூர் – 81.07%
  • இராணிப்பேட்டை – 82.52 %
  • திருப்பத்தூர் – 77.85 %
  • விழுப்புரம் – 85.31 %
  • கள்ளக்குறிச்சி82,59%
  • திருநெல்வேலி 69.34%
  • தென்காசி – 73.35 %
  • மொத்தம் – 78.47%

Recent Posts

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

9 minutes ago

CSK vs DC : பந்துவீச்சில் கட்டுப்படுத்திய சென்னை., நிலைத்து ஆடிய டெல்லி! 184 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…

58 minutes ago

CSK vs DC : விசில் போடு மச்சி.., சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த 2 முக்கிய அப்டேட் இதோ…

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…

2 hours ago

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…

4 hours ago

சம்பளத்தை விட அதிகமாக அபராதம் கட்டுகிறாரா திக்வேஷ் ரதி? உண்மை என்ன?

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…

4 hours ago

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…

6 hours ago