75th Republic day - Governor RN Ravi - CM MK Stalin [File Image]
இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்திற்கு நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் கொடியேற்றி வைப்பது போல, குடியரசு தின விழாவுக்கு நாட்டின் குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள் தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவர்.
தமிழக தலைநகர் சென்னையில், தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, மெரினாவில் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Republic Day 2024 : நீதித்துறையின் அடையாளம் ராமர் கோயில்… குடியரசு தலைவர் உரை.!
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். தற்போது கொடியேற்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் முப்படை வீரர்கள், பள்ளி கல்லூரி தேசிய மாணவர் படையினர் , உள்ளிட்ட பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மத நல்லிணக்க விருது, தமிழக அரசின் சிறப்பு விருது, வீர தீர செயல்களுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…