நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மிக்க சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றியுள்ளார்.அதன்பின் மக்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி பல்வேறு விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில்,75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த நிகழ்வில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,திமுக அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த 59 அடி உயரம் கொண்ட தூணின் உச்சியில் நான்கு சிங்கங்களின் மேல் அசோக சக்கரம் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக துருப்பிடிக்காத வகையிலான உலோகத்தைக் கொண்டு ரூ.195 கோடியில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும்,ராணுவத்தினரை போற்றும் விதமாக நான்கு ராணுவ வீரர்களின் சிலைகள் தூணை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பு ஆகும்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…