தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்பாடு – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என்று கூறி உள்ளார்.
நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன உபகரணங்கள் மற்றும் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் உருவாக்காட்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிடி ஸ்கேன்,மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளை கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.