மக்களவை தேர்தலை முன்னிட்டு 750 பேர் கைது
- மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் ஆணையமும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில், மக்களவை தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள் மற்றும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் தகுந்த எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.