தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சென்னையில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சென்னையில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் இதுவரை 12, 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்களையே தேர்வு பணிக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)