சென்னையில் 75கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் !
சென்னை, பாரிமுனையில் இருக்கும் வீடு ஒன்றில் 75 கிலோ கடல் குதிரைகளை வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருப்பதாக சென்னை காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக, பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பரூக் என்பவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் அவரது வீட்டில் 5 மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 75 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பரூக்கை போலீசார் கைது செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.