தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 20 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துளளது.
இன்று கொரோனாவால் உயிரிழந்தோரின், 50 வயதிற்கு உட்பட்ட 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று தனியார் மருத்துவமனையில் 27 பேரும், அரசு மருத்துவமனையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,475 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 207 பெரும், திருவள்ளூரில் 175 பெரும், மதுரையில் 167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 52 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இதுவரை 1,151 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…