75-ஆவது சுதந்திர தின விழா – தமிழக ஆளுநர் தேநீர் விருந்து!!
சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.