முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்;30 நிமிடங்களில் நிறைவு பெற்ற குடியரசு தினவிழா!
சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.
நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியது இதுவே முதல்முறை. இதனையடுத்து, முப்படையினர்,காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து,பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.அதன்பின்னர்,சிறப்பு ஊர்திகள் அணிவகுத்து சென்றன.இதனையடுத்து,அங்கிருந்து ஆளுநர் தனது மாளிகைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.அவரை வழியனுப்பிய பிறகு,முதல்வர் அவர்களும் புறப்பட்டு சென்றுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,30 நிமிடங்களில் குடியரசு தின விழா நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.