#73rdRepublicday:8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை – வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை:குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று வழங்கப்படவுள்ளது.
நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வழங்கப்படவுள்ளது.அதன்படி,
- உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது.
- திருவொற்றியூர் கட்டட விபத்தின்போது,அப்பகுதி மக்களை காப்பாற்றிய திமுகவின் தனியரசுக்கு விருது.
- விழுப்புரம்,திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்புத்துறை வீரர் ராஜீவ்காந்திக்கு விருது.
- கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன் என்பவர் விருது பெறுகிறார்.
- மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு விருது.
- திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காபடரிய தேதுலுக்கம்ப்பட்டியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு சிறுவன் லோகித்திற்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
- திருப்பூரில்,நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.
மேலும்,இவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.