ரூ.730 கோடி வாடகை பாக்கி – சென்னை ரேஸ் கிளப்புக்கு ஐகோர்ட் உத்தரவு!
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவு.
சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730.87 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பணக்காரங்களுக்காக ஒதுக்கிய 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
2004 முதல் செலுத்த வேண்டிய ரூ.12,281 கோடியை வசூலிக்க நோட்டீஸ் அனுப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடகை பாக்கியை செலுத்த தவறினால் காவல்துறை உதவியுடன் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது. 1946-ல் இருந்து அரசின் நிலம் 99 ஆண்டுகளுக்கு ரேஸ் க்ளப்புக்கு ஆண்டுக்கு ரூ.614.13 வாடகைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 160 ஏக்கர் அரசு நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டு முதல் உயர்த்திய வாடகை பாக்கியை செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.